திருமகள் என்ற லட்சுமி, மண்மகள் என்ற பூமாதேவி, ஆயர்மகள் என்ற நீளாதேவி ஆகியோர் திருமாலின் பத்தினியர் ஆவர். லட்சுமியை ஞானப்பால் ஊட்டும் தாய் எனவும், செல்வம் தருபவள் என்றும், பூமாதேவியை குற்றம் செய்தாலும் தாயைப் போல பொறுத்துக் கொள்பவள் என்றும், நீளாதேவியை குற்றம் செய்தாலும் பெருமாள் கண்ணில் படாமல் மறைத்துக் கொள்பவள் என்றும் சொல்வதுண்டு.