பதிவு செய்த நாள்
19
அக்
2015
11:10
எரியோடு: எரியோடு திருஅருள் பேரவை சார்பில், ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில், மாவட்டத்திலுள்ள பல்வேறு பெருமாள் கோயில்களுக்கு ஆன்மிக ஸ்தல யாத்திரை சென்று வருவர். 27வது ஆண்டாக நடப்பாண்டில் 5 வாரங்களாக முறையே வி.மேட்டுபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், சீத்தமரம் நால்ரோடு அருகிலுள்ள பிரசன்னப் பெருமாள் கோயில், ஆத்தூர்பிள்ளையூர் அழகுமலைப்பெருமாள் கோயில், நாகையகோட்டை ஆதிநாராயணப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் கோயில் சென்றனர். சிறப்பு வழிபாடுகளும், பஜனை, பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடந்தன. திருஅருள் பேரவை தலைவர் என்.ராமகிருஷ்ணன், செயலாளர் எம்.பழனிச்சாமி, ஓய்வு பெற்ற துணை கலெக்டர் மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.