பதிவு செய்த நாள்
23
அக்
2015
11:10
வலசை வெட்டிக்காடு: வலசை வெட்டிக்காடு, ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் மகா சம்ப்ரோக்ஷணம், வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வலசை வெட்டிக்காடு ஊராட்சி. இங்குள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட வலம்புரி விநாயகர், ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நவக்கிரகம் ஆகிய தெய்வங்களுக்கு, வரும் 25ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. முன்னதாக, நாளை, காலை 8:30 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் புதிய பிம்பங்கள் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பின், மாலை 5:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெறும். மறுநாள் 25ம் தேதி காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 8:40 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், காலை 9:00 மணிக்கு, கோபுர மகா சம்ப்ரோக்ஷணமும், காலை 9:30 மணிக்கு, அனைத்து மூர்த்திளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறும். பின்னர் பிரசாதம் வழங்கப்படும். அன்று மாலை, சுவாமி வீதிஉலா நடைபெறும்.