பதிவு செய்த நாள்
27
அக்
2015 
11:10
 
 திருப்புத்தூர்: திருப்புத்தூர் தம்பிபட்டி கவுரி விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.பல நூற்றாண்டு பழமையான இக்கோயிலில் கடந்த 2003ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மீண்டும் தம்பிபட்டி கிராமத்தினர், இளைஞர்கள்,பொதுமக்களால் திருப்பணி நடந்து, புதிதாக ஆதிவிநாயகர்,மகாலெட்சுமி,துர்க்கை கோபுரத்துடன் கூடிய தனி சந்நிதி, முன்மண்டபம்,சாளரம்,திருவாச்சி அமைக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் அக்.24ல் வாஸ்து பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜைகள் துவங்கி,பின்னர் கடம் புறப்பட்டன. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில், பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் புனித நீரால் காலை 10.20 மணிக்கு விமான,மூலவர் கும்பாபிசேகம்செய்வித்தார். பின்னர் மகா அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.