பதிவு செய்த நாள்
27
அக்
2015
11:10
குறிச்சி: மலுமிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. மலுமிச்சம்பட்டி - செட்டிபாளையம் ரோட்டில், மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புனரமைக்கும் பணிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா, 24ல், அனுக்ஞை, கணபதி பூஜை, புண்யாஹவாசனம், கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, தன பூஜை, மதியம் விமானம், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், மகா தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தன. 9:30 மணிக்கு விமானம், மூலவர் மற்றும் பாலகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை, அம்பாள் உபாசகர் ஞானசேகர குருக்கள் நடத்தினார். மதியம், 12:00 மணிக்கு, மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளானோர் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். இன்னிசை, நாட்டியம், பஜனை கச்சேரி, பட்டிமன்றம் நடந்தன. ஏற்பாடுகளை, விழா கமிட்டித் தலைவர் சுப்ரமணியம், செயலாளர் தர்மலிங்கம், ஊர்கவுண்டர் பொன்னுசாமி, அர்ச்சகர் வைத்யநாத குருக்கள் செய்திருந்தனர்.