Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எவ்வளவு பாட்டு பாடியிருப்பாங்க! எதுதான் நடக்காது இதைப்படித்தால்...! எதுதான் நடக்காது இதைப்படித்தால்...!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கிரகங்களை திட்டாதீர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2015
12:10

ஐயோ...சனியன் புடிச்சு போனவனே...இந்த பாவி என்றைக்கு விலகுறது... இவனுக்கு படிப்பு மண்டையிலே ஏறப்போவுது...! இந்த குரு நீசமாகி கிடக்கிறாராமே! இவளுக்கு எப்ப தான் கல்யாண யோகம் வந்து தொலையப் போகுதே...ராகுவைப் போல கொடுப்பாருமில்லை. கெடுப்பாருமில்லையாம். இவர் என்னத்த கொடுத்தாரு... கெடுக்கிறதுக்குனே என்னை தேர்ந்தெடுத்திருக்கிறானே...இப்படி ஒவ்வொரு கிரகத்தையும் திட்டித் தீர்ப்பவர்கள் ஏராளம். இப்படி கிரகங்களைத் திட்டக்கூடாது என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.ஒருமுறை, பெரியவரைத் தரிசனம் செய்ய ஜோதிடர் வருவர் வந்தார். அவரது குடும்பம் மிகவும் பெரியது. ஜோதிடம் கணித்துச் சொல்வதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. செலவுக்கு ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். பெரியவரை தரிசனம் செய்த அவர், பெரியவா...எனக்கு வருமானம் போறலே! ரொம்ப சிரமப்படறேன்...நீங்க தான், எனக்கு அனுக்கிரகம் செய்து, வருமானம் உயர அருளாசி தரணும், என்று வேண்டிக் கொண்டார்.பெரியவர் அவரிடம், நீ உன்னோட அப்பா வசித்த பூர்வீக வீட்டில் தானே இருக்கே...? என்று கேட்டார்.அதற்கு ஜோதிடர், இல்லை பெரியவா... அங்கே என் அண்ணா இருக்கான். அதற்கு மேலண்டை இருக்கிற ஒரு வீட்டில் நான் குடியிருக்கேன்... என்று பதிலளித்தார்.நீ அந்த வீட்டில் குடியிருக்க வேண்டாம். உன்னோட பூர்வீக வீட்டிற்கு கிழக்கு பக்கத்திலே இருக்கிற பழைய மாட்டுக்கொட்டகை இருக்குதே...அந்த இடத்திலே, ஒரு குடிசை போட்டுகிட்டு அங்கே போய் குடி இரு, என்றார் பெரியவர்.அவர் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இருந்தது. அந்த ஜோதிடரின் குடும்பம் பரம்பரை பரம்பரையாய் அம்பாளை உபாசனை (பூஜை) செய்த குடும்பம். அதனால், புனிதம் மிக்க பசு கொட்டிலில் குடியிருக்கச் சொன்னார் பெரியவர்.அத்துடன், நீ எல்லாருக்கும் பலன்கள் சொல்லும் போது, கிரகங்கள் சரியில்லேன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே...! எதுக்காக, உங்க ஜாதகத்திலே குரு நீசன்...சனி பாபி, புதன் வக்ரம் என்றெல்லாம் சொல்றே...குரு என்பவர், தட்சிணாமூர்த்தி சொரூபம். சனி என்பவர் சூரியனின் புத்திரர். ஈஸ்வர பட்டம் பெற்றவர். அவரை பாபி என சொல்லலாமா! திருமணப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களிடம் கூட, பொருத்தம் இல்லே... என நிர்தாட்சண்யமாக சொல்லாமல், பெண்ணுக்கு விவாகம் வர கொஞ்சம் தாமதமாகும் என்று சொல். புத்திர பாக்கியம் பற்றி கேட்டால், அதற்கு பாக்கியமில்லை என வெளிப்படையாகச் சொல்லாமல், கொஞ்சம் பொறுத்து பார்க்கலாமே... என சமாளி, என்று புத்திமதி கூறினார்.இனிமேல் நீங்கள் சொன்னபடியே செய்கிறேன், என்ற ஜோதிடர், பெரியவரிடம் ஆசி பெற்று கிளம்பினார். நாமும் இனி கிரகங்களைத் திட்டாமல், அவை தரும் சோதனைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, நம் பணியைத் தொடர வேண்டும். அப்படி செய்தால், கிரகங்கள் மகிழ்ந்து நம்மை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்லும். (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar