கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் எழுந்தருளியுள்ள திரிபுர சுந்தரி சமேத வில்வநாதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் வில்வநாதீஸ்வரருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.