புதுச்சேரி: இடையார்பாளையம் ஜலகண்டேஸ்வரர் சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. புதுச்சேரி– கடலுார் சாலை இடையார்பாளையத்தில் உள்ள, அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமிையயொட்டி நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. காலை 9:00மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பக்தர்கள் வழங்கிய சாதம் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள், தீபாராதனைக்கு பிறகு, சாதத்தில் தயிர் மற்றும் சாம்பார் கலந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நாளில் சுவாமிக்கு அன்னதானம் செய்தால், ஆண்டு முழுவதும், பஞ்சமின்றி மக்களுக்கு உணவு கிடைக்கும் என்பது ஐதீகம். அதையொட்டி, நேற்று ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.