பதிவு செய்த நாள்
28
அக்
2015
11:10
பொள்ளாச்சி :பொள்ளாச்சியில், 27 நட்சத்திர மண்டல சகஸ்ர சண்டியாகம் நேற்று துவங்கியது. உலக நலன் வேண்டி, அக்னி டிரஸ்ட் சார்பில், 27 நட்சத்திர மண்டல சகஸ்ர சண்டியாகம் மற்றும் லலிதா த்ரிசதி சங்கர பாஸ்யம் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் மாரியம்மன் கோவிலிலிருந்து முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.பசு, குதிரையுடன், தேவராட்ட குழுவினரின் நடனத்துடன், பெண்கள் முளைப்பாரி எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, சண்டியாகம் நடைபெறும் ஆறுமுகம் நகருக்கு வந்தனர். பின், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நேற்று அஸ்வினி நட்சத்திரத்திற்கு சித்தி கணபதி மந்த்ர ஸ்ஹித ஸ்ரீ சண்டி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, இன்று பரணி நட்சத்திரத்திற்கு, ஹயக்ரீவ மந்த்ர ஸஹித ஸ்ரீ சண்டி ேஹாமம் என அடுத்த மாதம் 22ம் தேதி வரை சண்டியாகம் நிகழ்ச்சி நடக்கிறது. தினசரி, லலிதா த்ரிசதி சங்கர பாஸ்யம் விளக்கவுரை நிகழ்ச்சியும் நடந்தது. யாகத்தினை புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஷ்வரி அதிஷ்டானம் இளையபட்டம் ஸ்ரீமத் ப்ரணவானந்த சரஸ்வதி அவதுாத சுவாமிகள் நடத்தி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை 27 நட்சத்திர மண்டல சகஸ்ர சண்டி மகா யாக விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.