கீழக்கரை: உத்திரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். இதனடிப்படையில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. முன்னதாக மூலவர் மங்களநாதர் திருமேனிக்கு 18 வகையான அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து 101 படிகளில் சாதம் வடிக்கப்பட்டு காய்கறிகள், மலர்களுடன் படைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசித்தனர். சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் சுப்பையா, ஊராட்சிமன்றத் தலைவர் நாகராஜன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.