பதிவு செய்த நாள்
28
அக்
2015
11:10
சூலுார்: சூலுார் அடுத்த இடையர்பாளையம் கிராமத்தில் பாலதண்டாயுதபாணி, வேணு கோபால சுவாமி கோவிலில் திருப்பணி முடிவுற்று, 23ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. கணபதி ஹோமத்துடன், 24ம்தேதி காலை வேணுகோபால சுவாமி சம்ப்ரோக்சண விழா துவங்கியது. நான்காம் கால யாகம், 26ம்தேதி காலை, 5:00 மணிக்கு துவங்கியது. பூஜிக்கப்பட்ட கும்பங்கள் மேள தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 9:00 முதல், 10:30 மணிக்குள் விநாயகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கும்பாபிஷேகமும், வேணுகோபால சுவாமி, கருடாழ்வார், ஆஞ்சநேயருக்கு சம்ப்ரோக்சணமும் நடந்தன. பழனி நாச்சிமுத்து சுவாமி, இடும்பன் மற்றும் நவகிரஹங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜையும், அன்னதானமும் நடந்தது.