வத்தலக்குண்டு:எஸ். தும்மலப்பட்டியில் சதுர்த்தி விழாவுக்காக, விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் நடக்கின்றன. சதுர்த்தி விழாவில், இந்து முன்னணி சார்பில் திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும். இதற்கான சிலைகள் செய்யும் பணி எஸ்.தும்மலப்பட்டியில் நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இரு ந்து பாகங்கள் கொண்டு வரப்பட்டு, இங்கு இணைக்கப்படுகின்றன. காகிதக்கூலால் சிலை செய்யும் பணியில் 20 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில்,""108 வகை சிலைகள் செய்யப்படுகின்றன. தொழிலாளர்கள் விரதம் இருந்து இப்பணியை செய்கின்றனர், என்றார்.