வாஸ்து முறையில் கட்டப்பட்டுள்ள வீட்டின் வடகிழக்கு பகுதியில் பூஜையறை அமைத்து வழிபடலாம். இவ்வாறு அமைக்கப்பட்ட பூஜையறையில் பிரார்த்தனை செய்யும்போது மனம் சீரான நிலையில் இருக்கும் மற்றப் பகுதியில் பூஜையறை அமைந்திருந்தால் அது அமைந்திருக்கும். விதத்தைப் பொறுத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்மை உண்டாகும். பூஜையறையில் கடவுளின் உருவப் படங்கள், சிலைகள் ஆகியவற்றை வைத்து வண ங்கலாம். குலதெய்வத்தின் படம் அல்லது சிலையைக் கூட இந்த மாதிரியான பூஜையறையில் வைத்து வழிபடலாம். சிலர் கோயிலில் இருப்பதைப் போன்று பெரிய சிலையை வைத்து வணங்க விரும்புவர். அவ்வாறு பெரிய சிலைகளை வீட்டிலும் வைத்து வணங்குவதில் தவறில்லை. ஆனால் பூஜையறை வீட்டின் தென்மேற்கு, தெற்கு, தெற்கு மத்தியப்பகுதி ஆகிய இடங்களில் அமைந்திருக்க வேண்டும். மாறாக வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் அமைந்தால் அது தீமையை உண்டாக்கும்.