நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரம்: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2011 12:07
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருநாளை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு இன்று (27ம் தேதி) வளைகாப்பு உற்சவம் நடக்கிறது.காந்திமதியம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருநாள் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.4ம் திருநாளான இன்று (27ம் தேதி) நண்பகல் 12 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு காந்திமதிஅம்பாள் சன்னதியில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடக்கிறது.வளைகாப்பு உற்சவம் கம்பர் சமுதாயம் சார்பில் நடக்கிறது. இதனால் சிறப்பு தவில், நாதஸ்வர இன்னிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆடிப்பூரம் 10ம் திருநாள் இரவு ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாளும், சீமந்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கசன் காத்த பெருமாள், தக்கார் பொன்.சுவாமிநாதன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.