க.பரமத்தி: ஆலாம்பாளையம் ஸ்ரீ கன்னிமார் மற்றும் மதுரை வீரன் கோவில் 48வது மண்டல அபிஷேக நிறைவு நாள் விழா நடந்தது. கரூர் மாவட்டம் க.பரமத்தி யூனியன் முன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலாம்பாளையம் ஸ்ரீகன்னிமார் மற்றும் மதுரைவீரன் கோவில் நூறு ஆண்டுகளுக்கு முன் பழமையான கோவில். இது பராமரிப்பின்றி இருந்தது. சுமார் 2,000க்கு மேற்பட்ட குடும்பத்தினர் குலதெய்வமாக வணங்கி வந்த கோவிலை, பராமரிக்க, குடிப்பாட்டு மக்கள் முடிவெடுத்து இரண்டா ண்டு காலமாக 30 லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்தது. கடந்த ஜூன் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தினசரி மா லையில் தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி காலையில் 300க்கு மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் கொ ண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.