விஜயதசமி அன்று திருமணமான பார்வதி தன் புகுந்த வீடான கைலாசத்திலிருந்து பிறந்த வீடான வங்காளத்திற்கு போவதாக ஒரு ஐதீகம் கொல்கத்தா பகுதியில் உண்டு. எனவே துர்க்கா பூஜை, வங்கப் பெண்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பூஜையை ஒட்டிப் பெண்கள் தங்கள் தாய் வீடு செல்கின்றனர். புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீடு வரும் மகளை தாய், தந்தையர் வரவேற்றுக் குங்குமம், வளையல், புடவை, இனிப்புகள் தந்து மகிழ்கின்றனர்.