1. பிறருக்கு பணம் கொடுக்கும்போது வாசல் படியில் நின்று கொடுக்கக்கூடாது. 2. வாசல் படி , உரல், ஆட்டுக்கல் மீது அமரக் கூடாது. 3. வெற்றிலையையும், வாழையிலையையும் வாட விடக் கூடாது. 4. குத்து விளக்கைத் தானாக அணைய விடக் கூடாது. ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தால் மட்டுமே அமர்த்த வேண்டும். 5. எவரையும் அமங்களமான வார்த்தைகளால் திட்டக்கூடாது. 6. அதிகமாக கிழிந்த துணியை உடுத்தக் கூடாது. உப்பை கீழே சிதறவிடுவதோ, அரிசி களையும்போது அரிசியைச் சிதற விடுவதோ கூடாது. 7. இரவு நேரங்களில் பால், மோர், போன்ற நீர் ஆகாரங்களை நம் வீட்டை விட்டு மற்றவர் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.