புதுச்சேரி : முத்தியால்பேட்டை சோலை நகர் மந்தைவெளி மாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சோலை நகர் மந்தைவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 21ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. மாலை 3 மணிக்கு சக்தி கரகம் புறப்பட்டது. கடந்த 22ம் தேதி காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனை, 12 மணிக்கு பாற்சாகை வார்த்தல் நடந்தது. மதியம் 2 மணிக்கு செடல் போடும் நிகழ்ச்சியும், 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. தொடர்ந்து 25ம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.