Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறப்புச் செய்திகள் 3! பிறந்தநாள் கிழமை பலன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிம்மதியா தூங்க முடியலையா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2015
05:11

தினமும் வீண் செலவே எவ்வளவு ஆகிறது தெரியுமா...! பணம் கையில் தங்கவே இல்லை... ராத்திரியானால் துõக்கம் வரவே மறுக்கிறது...கடன்காரர்கள்  கனவில் மிரட்டுகிறார்கள்...இப்படி பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள், சம்பந்தர் அருளிய இந்த தேவார பாசுரங்களை பாடலாமே!

காதல் ஆகிக் கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது;
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

நெக்குள் ஆர்வம் மிகப்பெரு கிந்நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவர்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.

 இயமன் துõதரும் அஞ்சுவர்; இன்சொலால்
நயம் வந்து, ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம்தான் நினைவார்க்கு இனியான், நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.

கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.

மந்தரம் ஆன பாவங்கள் மேவிய
பந்தனை அவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்,
நந்தி நாமம் நமச்சி வாயவே.

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்,
வரதன் நாமம் நமச்சி வாயவே.

 இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய்வகை
நலம்கொள் நாமம் நமச்சி வாயவே.

போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்;
யாதும் காண்பரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.

கஞ்சி மண்டையர், கையில்உண் கையர்கள்,
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்,
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுதுசெய்
நஞ்சு உண் கண்டன் நமச்சி வாயவே.

நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால், தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar