வனத்திருப்பதியில் வரும் 2ல் ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2011 12:07
குரும்பூர் : குரும்பூர் அருகே உள்ள வனத்திருப்பதியில் ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி விழா வரும் 2ம் தேதி நடக்கிறது. குரும்பூர் அருகே உள்ள புன்னை நகர் வனத்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயிலில் வரும் 2ம் தேதி ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 7 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் திருமஞ்சனம், 8 மணிக்கு சிறப்பு அலங்காரம், திருவாராதனம், தளிகை கோஷ்டி போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாட்டை கோயில் நிறுவனர் ராஜகோபால், மேலாளர் வசந்தன், ஓட்டல் சரவணபவன் முதன்மை நிர்வாகி கணபதி, சிற்பி கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.