பதிவு செய்த நாள்
28
ஜூலை
2011
12:07
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுடலைமாடசுவாமி கோயில் ஆடித்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். திருச்செந்தூர் யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழா நடந்தது. விழாவில் காலை மற்றும் மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. விழாவில் பக்தர்கள் சுவாமிக்கு வாழைப்பழத்தார் கட்டி நேர்ச்சை செலுத்தினர். கொø டவிழாவை முன்னிட்டு சுவாமிகள் மேளதாளத்துடன் நகர்வலம் வந்தனர். இரவு 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் மஹாதீபாராதனை நடந்தது. இவ்விழாவில் மேலத்தெரு, யாதவசமுதாய தலைவர் நம்பி, கொடைவிழா கமிட்டி தலைவர் பாலசுப்பிரமணியன், தேவஸ்தான கேண்டீன், ராஜேஸ்வரன், வீரக்கண், செங்கண்ணன், கந்தன், சாந்தி பேக்கரி கோபால், ராதாகிருஷ்ணன், சுபாஹோட்டல் கோபால், வசந்தம் ஸ்வீட்ஸ் வேலாயுதம், அனில்நட்டார், கவிதாöடிமேட் நல்லகண்ணு, சரண்யா ரெடிமேட் மந்திரம், தேமுதிக., நகர பொருளாளர் ராமன், விவேகா கன்ஸ்ட்ரக்ஷன் நாராயணன், வெங்கடேசன், அர்ச்சனாகிட்டன், குமார், அந்தோணி, ஐயம்பெருமாள், கணேஷ் சப்பல் கோபால்கிருஷ்ணன், செங்கண்ணன், இசக்கிமுத்து, நாகமணி, எல்எஸ்.,ஜூவல்லர்ஸ் லெட்சுமணன், வாள் சுடலை, வீரபாகு மஹால் வீரபாகு, தொழில்அதிபர்கள் சந்திரன், ரெங்கன், பெருமாள், கிருஷ்ணன், திமுக விவசாய அணி மாவ ட்ட துணை அமைப்பாளர் இசக்கியப்பன், அதிமுக பேச்சாளர் அர்ச்சுனன் உட் பட பலர் கலந்துகொண்டனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நட ந்தது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.