சேலம்: சேலத்தில் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் சத்யசாய் பாபாவின் 90வது பிறந்த நாளையொட்டி, உலக நன்மைக்காக, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் பஞ்ச மகா யாகம் நேற்று டி.வி.என்., மண்டபத்தில் துவங்கியது. பஞ்ச மகா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.