சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கிச் சென்றபோது ஒரு இடத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை தரிசிக்க தாழ்வாக பறந்தார். அப்போது அந்த மலையில் இருந்து சில கற்கள் கீழே விழுந்தன. அந்த கற்களில் இருந்து அனுமன் சிலை ஒன்றை பிற்காலத்தில் வடித்தார்கள். அந்த இடம் சென்னை அருகே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் ஆகும். இங்குள்ள ஆஞ்சநேயர் விசால ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். இதேபோல் திருவையாறு புது அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் இடது கையில் புத்தகத்தையும் வலது கையில் வீணையையும் கொண்டு இசைஞானி கோலத்தில் காட்சி தருகிறார்.