சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. சென்னிமலை காங்கேயம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 21ம் தேதி, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 28ம் தேதி கம்பம் நடப்பட்ட பிறகு தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. காலை முதலே பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு,கோழி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் மாரியம்மனை வழிபாடு செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.