சூலுார்: பொத்தியாம்பாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 22ம்தேதி நடக்கிறது. இங்கு மகா மாரியம்மன், விநாயகர் கோவில் கோபுரங்கள் புதிப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தன. பரிவார மூர்த்திகளுடன் பர்வதவர்தனி சமேத ஸ்ரீராமநாத சுவாமிக்கு புதிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷே விழா வரும், 18ம்தேதி மாலை, 5:30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. மூன்று கால யாக பூஜைகள் முடிவுற்று வரும், 22ம்தேதி காலை நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி நடக்கிறது. காலை, 8:30 முதல், 9:30 மணிக்குள் விமானங்கள் மற்றும் விநாயகர், மகா மாரியம்மன், சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.