பதிவு செய்த நாள்
17
நவ
2015
12:11
திருப்பூர் : திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில், 56வது ஆண்டு மண்டல பூஜை விழா இன்று துவங்குகிறது. காலை, 4:30 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் மண்டல பூஜை துவங்குகிறது. 30ம் தேதி மாலை, கொடியேற்று விழா நடக்கிறது. சபரிமலை பிரதம தந்தரி கண்டரரு மோகனரு பங்கேற்கிறார். டிச., 1ல் நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம், 2ம் தேதி இரவு, பகவதி சேவை, 3ல் உற்சவ பலிபூஜை, 4ல் பறையெடுப்பு, பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளன. டிச., 5ல் பவானி கூடுதுறையில் சுவாமி ஐயப்பனுக்கு, ஆறாட்டு உற்சவம் நடக்கிறது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்றிரவு, திருப்பூரில் யானை மீது சுவாமி ஐயப்பன் அமர்ந்த நிலையில், வான வேடிக்கையுடன் ஊர்வலம் நடக்கும். மண்டல பூஜை விழாவையொட்டி, நாளை முதல், டிச., 19 வரை தினமும் மாலை, 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, நவ., 22, 29, டிச., 6, 13, 20, 27, ஜன., 3, 10 ஆகிய நாட்களில், பக்தர்களுக்கு கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம் செய்து வருகிறது.