தேவகோட்டை: ஐப்பசி முதல் நாள் முதல் தீர்த்தவாரியும், ஐப்பசி கடைசி நாள் கடமுழுக்கு தீர்த்தவாரியாக தேவகோட்டை மணிமுத்தாறில் சுவாமிகள் தீர்த்தவாரி கொடுப்பர். கடைசி நாளான நேற்று சிலம்பணி சிதம்பர விநாயகர், சிவன் கோயிலிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், கைலாசநாதர், மந்திரமூர்த்தி விநாயகர், கிருஷ்ணர் கோயில், ரங்கநாதபெருமாள், கோதண்டராமர், கோட்டூர் நயினார் வயலிலிருந்து அகத்தீஸ்வரர் சுவாமிகள் மணிமுத்தாறில் கடமுழுக்கு தீர்த்தவாரி கொடுத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.