பரம கருணாமூர்த்தியாகிய இறைவன் எல்லா உயிரினங்களுக்குமே அருள் புரிபவர்.ஆனால், அரக்கர்கள் அவரையே எதிர்க்கிறார்கள். நாத்திகர் முதலானவர்கள் இறைவனை கெட்டவராக பேசுகிறார்கள். இருந்தாலும், இறைவன் அவர்கள் யாரையும் கெடுப்பதில்லை. எல்லாருக்கும் நல்லவராக இருந்து கொள்கிறார். இந்த மனப்பக்குவம், எல்லாருக்கும் வந்து விட்டால், பிறர் நம்மை கெட்டவர் என்று சொன்னாலும், அதை பொருட்படுத்தாமல், எல்லாருக்கும் நல்லவராக வாழ முடியும்.