பதிவு செய்த நாள்
21
நவ
2015
11:11
குமாரபாளையம்: வெள்ளபாறைபுதூர் மகா கணபதி, எல்லை முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர். குமாரபாளையம் அடுத்த, வெள்ளபாறைபுதூரில், மகாகணபதி, எல்லைமுனியப்ப ஸ்வாமி கோவிலில், வரும், 23ம் தேதி, காலை, 5.15 மணிக்கு, கும்பாபிஷேக விழா நடக்கிறது. அதையடுத்து, நேற்று, குமாரபாளையம் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்த குடங்களில் எடுத்து வரப்பட்ட புனிதநீர், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இன்று மாலை, 4 மணிக்கு தீர்த்த கலசங்கள் கோவிலுக்கு எடுத்து வருதல், மாலை, 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், பூர்ணஹூதி உள்ளிட்ட முதற்கட்ட யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை (நவ., 22) 2ம் மற்றும் 3ம் கட்ட யாகசாலை பூஜை நடக்கிறது. வரும், 23ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது.