Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை விழா! பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை தேவசம் போர்டு தலைவருக்கு செம டோஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2015
11:11

புதுடில்லி: சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து, சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த, தேவசம் போர்டு தலைவர் பரயாறு கோபால கிருஷ்ணனுக்கு, பேஸ்புக் சமூக வலை தளம் வாயிலாக பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மாதவிடாய் போக்கு உள்ள பெண்கள், சபரிமலை செல்ல அனுமதியில்லை. குறிப்பாக, 6 வயது சிறுமியர் முதல், 60 வயது பெண்கள் வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், பெண்கள் மாதவிடாய் காலத்தில், சபரிமலைக்கு வந்து விடக் கூடாது; அவ்வாறு செல்வது, தீட்டு என, காலம் காலமாக நம்பப்படுவது தான்.சபரிமலை அய்யப்பன் கோவிலை கட்டுப்படுத்தும் அமைப்பான, தேவசம் போர்டின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற பரயாறு கோபாலகிருஷ்ணனிடம், சபரிமலைக்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்படுவரா? என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மனிதர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறிய கருவிகள் வந்துள்ளது போல, பெண்களுக்கு மாதவிடாய் போக்கு இருக்கிறதா என்பதை கண்டறிய, விரைவில் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விடும். அதன் பின், பெண்களை சபரிமலைக்கு அனுமதிப்பது குறித்து யோசிக்கப்படும் என்றார். இதை அறிந்த, கேரளா மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெண்கள், கடும் கோபம் அடைந்தனர். ஹேப்பி டூ பிளீடு என்ற பெயரில், பேஸ்புக் இணையதளத்தில் பக்கத்தை துவக்கி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கோபத்தை வார்த்தைகளாக வடித்து விட்டனர்.மாதவிடாய் காலத்தில் பெண்கள், சுத்தமாக இருப்பதில்லை என்பதை இவர் அறிந்தாரா அல்லது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடவுளை வணங்கக் கூடாது என, கடவுள் சொல்லியுள்ளாரா? என, பல பெண்கள், தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்தனர். போதாக்குறைக்கு, பல பெண்கள், மாதவிடாய் காலத்தில் அணியும் ஆடைகளையும் காட்டி, கோபால கிருஷ்ணனுக்கு எதிர்ப்பை காட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar