பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2015 11:11
பரமக்குடி: சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. காலை 9 மணி தொடங்கி, மூலவர் பரமஸ்வாமி மற்றும் உற்சவர் சுந்தரராஜப் பெருமாளுக்கு துளசி மூலம் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. மாலை பெருமாள் வைகுண்டநாதனாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.