குறிச்சி: மார்த்தோமா சிரியன் சர்ச்சில், அறுவடை திருநாள் விழா நடந்தது. கோவை, டாடாபாத் மார்த்தோமா சிரியன் சர்ச்சில், 72ம் ஆண்டு அறுவடை திருநாள் விழா முன்னிட்டு, சிறப்பு ஆராதனை நடந்தது. சபை ஆயர் ஜோசப் ஆராதனையை நடத்தினார். தொடர்ந்து, சபையோர் வழ ங்கிய நன்கொடை பொருட்கள் ஏலம் நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, உதவி ஆயர் சாம் மேத்யூ மற்றும் சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.