ஆலயத்தை விட்டு சுவாமி வெளிப்படும் போது, அரசருக்குரிய மரியாதை செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. இதனை ராஜோபசாரம் என்பர். குடை, தீவட்டி, மேளம், எக்காளம், பக்தர்களின் வாழ்த்தொலிகளோடு சுவாமி புறப்பட்டு வீதி வலம் வரும் போது, அவரது மகிழ்ச்சியான பார்வை படும் திசையெல்லாம் சுபிட்சம் உண்டாகும்.