Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிறப்பிலேயே குணம் உண்டாகிறதா? மனைவியை குறை சொல்லாதீர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருவண்ணாமலை டிட்பிட்ஸ்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2015
01:11

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல்நாளில் துர்க்கை வழிபாடும்,இரண்டாம் நாளில் பிடாரியம்மன் வழிபாடும், மூன்றாம் நாளில் விநாயகர் வழிபாடும் நடக்கிறது.

இரண்டு தலபுராணங்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளன. இதில் அருணகிரிப்புராணத்தை எழுதியவர் கண்கட்டி மறைஞான சம்பந்தர். அருணாசல புராணத்தை எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர்.

சோணாசலத்திற்கு(திருவண்ணாமலைக்கு) சிறந்த க்ஷேத்திரம் இல்லை. சோம வாரத்திற்கு (கார்த்திகை மாத திங்கள்கிழமை விரதம்) சிறந்த விரதம் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு.

காலபைரவர், சொர்ண பைரவர் என்று இரு சன்னிதிகளும், கம்பத்து இளையனார், கோபுரத்து இளையனார் என்று இரண்டு முருகன் சன்னிதிகளும் இங்குள்ளன. கிளி கோபுரத்தின் அருகே பிச்சை இளையனார் என்ற முருகன் சன்னிதியும் உள்ளது.

விசிறி சாமியார் என்னும் யோகி ராம்சுரத்குமார், திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில், இங்குள்ள சம்பந்த விநாயகர் சன்னிதி முகப்பிலேயே தங்கியிருந்தார்.

கார்த்திகை தீப திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் புறப்பாடு நடக்கும். இதற்கு முன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள்வார். அவர் வந்ததும் மலையில் தீபம் ஏற்றப்படும்.

சம்பந்த விநாயகர் கோவிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்தில், அந்தக் கால மன்னர்கள் முடிசூட்டிக் கொள்வது வழக்கம்.

சிவன் கோவில்களில் ஆறுகால பூஜையின் போது சுவாமிக்கு 16 வகை தீபங்கள் காட்டுவர். இதில் மகாதீபம் என்னும் தீபம் சிவனையே குறிப்பதாகும். திருவண்ணாமலை தீபத்தை மகாதீபம் என்று சொல்வர்.

புதுச்சேரியில் உள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டாலஜி என்னும் நிறுவனம் திருவண்ணாமலைக் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளது.

மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய இரு நாட்களில் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக எழுந்தருள்வார். வேறு எந்த உற்சவரும் இதன் வழியாகச் செல்வதில்லை.

மலை தீபம் ஏற்ற காண்பிக்கப்படும் தீப்பந்தத்தை எலால் என்று சொல்வர். சிக்னல் போல இந்த தீப்பந்தம் காட்டியதும் மலைதீபம் ஏற்ற அண்ணாமலைக்கு அரோகரா என்ற சப்தம் எங்கும்
எதிரொலிக்கும்.

தீபதரிசனம் பார்க்க வருவோருக்கு சட்டிச்சோறு பிரசாதம் அந்தக்காலத்தில் அளிப்பது வழக்கம். இதில் புளியங்கறி, மிளகு ரசம், உப்பு, நெய், தயிர், பாக்கு இருக்கும். வாழை இலையும் தரப்படும்.

இக்னீஷியஸ் ராக் என்னும் பாறை வகையைச் சேர்ந்த மலை திருவண்ணாமலை. நெருப்பினால் உண்டான மலை என்பது இதன் பொருள்.

அருணகிரியாரின் தாய் முத்தம்மை வழிபட்ட விநாயகர் முத்தம்மை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோவில் தேரடி வீதிக்கும், கொசமடத் தெருவுக்கும் இடையே உள்ள ரேடியோ கிரவுண்ட் என்னும் பகுதியில் உள்ளது.

திருமஞ்சன கோபுரத்தின் வழியாக தினமும் அபிஷேக நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், சிவன் அபிஷேகத்திற்கு இதைப் பயன்படுத்துவதில்லை. நடை திறப்பதற்கு முன் இந்நீரைக் கதவின் முன் தெளிப்பது வழக்கம்.

திருவிழா காலங்களில் நாதஸ்வரத்துடன் நபிரி, பாங்கரா, கொம்பு, செண்டை போன்ற அந்தக் கால வாத்தியங்களும் இங்கு இசைக்கப்படுகின்றன.

திருவண்ணாமலைக் கோவிலின் பரப்பு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி.

சிவன் கோவில்களில் உற்சவராக சோமாஸ்கந்தர் வீற்றிருப்பார். இங்குள்ள சோமாஸ்கந்தருக்கு மட்டும் பக்தானுக்ரக சோமாஸ்கந்தர் என்னும் சிறப்பு பெயர் வழங்கப்படுகிறது.

சிவனுக்குரிய 64 மூர்த்தங்களில் ஒன்று அண்ணாமலையார் மூர்த்தம். இதை சிற்பநுõல்கள் லிங்கோத்பவ மூர்த்தி என்று குறிப்பிடுகின்றன. கருவறையின் பின்புறத்தில் இவருக்கு சன்னிதி இருக்கும்.

அண்ணாமலை என்பதற்கு நெருங்க முடியாத மலை என்று பொருள். நெருப்பு வடிவமாக இருந்ததால் அடிவாரத்தையும், உச்சியையும் யாராலும் நெருங்க முடியவில்லை என்பது இதன் விளக்கம்.

171 அடி உயரம் கொண்டது இங்குள்ள அம்மணியம்மாள் கோபுரம். இது விஜயநகர மன்னர்களால் தொடங்கப்பட்டு, பாதியில் நின்று போனது. இத்திருப்பணியை நடத்தி முடித்த அம்மணி அம்மாளின் பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில் அஞ்சல் துறை அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை (பிக்சோரியல் கேன்சலேஷன்) 12.12.1997ல் வெளியிட்டது.

அண்ணாமலையாருக்கு சாத்தப்படும் ஆடைகள் வைக்கப்படும் அறை வஸ்திர கொட்டடி எனப்படுகிறது. பொக்கிஷ அறைக்கு அருகில் இது உள்ளது.

ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள சர்க்கரைக் குளக்கரையில் நந்தி உள்ளது. மலையைச் சுற்றி அமைந்துள்ள அஷ்ட நந்திகளில் இதுவே முதல் நந்தி.

பஞ்சமுக சுவாமி என்னும் இசக்கி சுவாமிகள் திருவண்ணாமலையை 1008 முறை அங்கப் பிரதட்சணம் செய்தவர். இல்லறத் துறவியான இவர் 1959ல் திருவண்ணாமலைக்கு வந்தார்.

திருமூலர் பாடிய திருமந்திரத்தில் திருவண்ணாமலை வரலாறு குறித்து, ஒன்பது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

செவ்வாய்க்கிழமையில் திருவண்ணாமலையைச் சுற்றி வந்தால் மோட்சம் கிடைக்கும் என்று மக்களிடம் சொன்னவர் சேஷாத்ரி சுவாமிகள்.

உயிரை மாய்க்க முயன்ற அருணகிரிநாதரைக் காப்பாற்றிய தலம் திருவண்ணாமலை. இத்தலத்து முருகன் மீது, இவர் 79 திருப்புகழ் பாடல்கள் பாடியள்ளார்.

மாசி மாதம் முதல் ஐந்து நாட்கள், உண்ணாமுலை அம்மன் சன்னிதியில் தினமும் முகத்தில் படும் சூரியஒளி கொஞ்சம் கொஞ்சமாக பாதம் வரை இறங்கி செல்வது சிறப்பானதாகும்.

ராஜகோபுரத்தின் கீழ்தளத்திலுள்ள துõண்களில் பரதநாட்டியத்தின் 108 கரணங்கள் அற்புத சிற்பங்களாக
வடிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை கோவிலின் தலவிருட்சம் மகுட மரம். இதற்கு மகிழ மரம் என்றும், வடவால விருட்சம் என்றும் பெயருண்டு.

அக்னி நட்சத்திரத்தின் போது அண்ணாமலையாருக்கு வாசனை திரவியம் கலந்த குளிர்ந்த நீரால் அபிஷேகமும், தயிர் சாத நைவேத்யமும் செய்வதோடு, நீர் சொட்டும் தாராபாத்திரமும் வைக்கின்றனர்.

கார்த்திகை தீபத்திற்கு மறுநாள், தை மாதத்தின் மூன்றாம் நாள் ஆகிய இரு தினங்களில்
அண்ணாமலையாரே இங்கு கிரிவலம் வருவார். பக்தர்கள் அண்ணாமலையாரோடு சேர்ந்து
கிரிவலம் வரலாம்.

மலையின் மீதுள்ள முலைப்பால் தீர்த்தத்தை செப்பனிட்டு திருப்பணி செய்தவர் நரிக்குட்டி சுவாமிகள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் தமிழில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.

தென்திசை கைலாயம், கவுரி நகரம், சுத்த நகரம், ஞானபுரி என திருவண்ணாமலைக்குரிய வேறு பெயர்கள் உள்ளன.

வெளிநாட்டவர் திருவண்ணாமலைக்கு வரக் காரணமாக இருந்தவர் பால்பிரண்டன். 1930ல் இங்கு வந்த இவர் எழுதிய நுõலில் திருவண்ணாமலை, ரமணர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இவர் நுõல் எழுதிய பின்னரே வெளிநாட்டவரையும் அண்ணாமலை ஈர்க்கத் தொடங்கியது.

திருவண்ணாமலை கோவில் கோபுரங்களைப் பற்றி ஆராய்ச்சி நுõலை எழுதிய மேலை
நாட்டவர் எம். எச். கிரேவ்லி.

அண்ணாமலையாருக்கு, திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணா நாட்டு உடையார், திருவண்ணாமலை உடையார் ஆகிய பெயர்கள் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.

மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை பாடலைப் மாணிக்கவாசகர் பாடிய தலம்
திருவண்ணாமலை.

ரமணாசிரம வளாகத்தில் தலைவலி சாமி சமாதி உள்ளது. தலைவலி தீர பக்தர்கள் இங்கு சுற்றி வந்து வேண்டிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

அண்ணாமலையாருக்கு 100 ஏக்கர் நிலம் தானமாக அளித்த வள்ளல் தனக்கோட்டி முதலியார். இவர் இக்கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்தவர்.

புலி, கரடி, மான், காட்டெருமை ஆகிய விலங்குகள் திருவண்ணாமலையில்வாழ்ந்ததாக சுத்தானந்த பாரதியாரின் கட்டுரைக் குறிப்பு கூறுகிறது.

பெரிய சந்திரசேகரர், சின்ன சந்திரசேகரர், பக்தானுக்ரஹ சோமாஸ்கந்தர், பெரிய நாயகர், சின்னநாயகர் என அண்ணாமலையாருக்கு உற்சவ மூர்த்திகள் பல இருக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar