அம்மா! எனக்குப் பசி வந்தவுடனேயே எழுப்பிவிடு என்கிறது குழந்தை. குழந்தாய்! பசி வந்தால் அதுவே உன்னை எழுப்பி விடும் என்கிறாள் தாய். ஆண்டவனை அடையவேண்டும் என்கிற பசி ஏற்பட்டால், யாரும் தட்டி எழுப்ப வேண்டியதில்லை. வழியும் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. பகவானே ஆண்டவனே என்று வாயினால் சொல்லும் பிரார்த்தனைகளைச் சொல்லாது. உள்ளம் கரைந்தால் பேச்சு அடங்கிவிடும். உண்மையான பக்தன் அழும்போது ஈஸ்வரியால் கவனியாமல் இருக்க முடியாது. ஓடி வந்து அருள்புரிவாள்.