பதிவு செய்த நாள்
25
நவ
2015
11:11
உடுமலை: பாலப்பம்பட்டி சபரி ஐயப்பன் கோவில், பெரியபட்டி ரங்கமாபாளையம் ஐயப்பசாமி - நாகராஜா கோவில் கும்பாபிேஷகம் நேற்றுமுன்தினம் நடந்தது. உடுமலை, பாலப்பம்பட்டியில் சபரி ஐயப்பன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, வளாகத்தில் கன்னிமூல கணபதி, மஞ்சள் மாதா, நாகராஜர், நவக்கிரக நாயகர், கருப்பண்ணசுவாமிகளுக்கு, தனித்தனியாக சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிேஷக விழா, நவ., 21ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, விக்ரகம், முளைப்பாரி, தீர்த்திக்குட வீதியுலாவுடன் துவங்கியது.நேற்றுமுன்தினம் அதிகாலை, 4:30 மணி முதல் காலை, 7:00 மணி வரை, திருப்பள்ளி எழுச்சி, திக்பாலர், யாகசாலை பூஜை, வேள்வி யாகம், கலசபூஜை, உபச்சார பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. காலை, 7:30 மணிக்கு, மகா கும்பாபிேஷகம் நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மகா அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உடுமலை பெரியபட்டி, ரங்கமாபாளையம் முத்து மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது, ஐயப்பசாமி கோவில். கோவில் கும்பாபிேஷகம், நவ., 22ம் தேதி மாலை, 6:10 மணிக்கு, மங்கள இசையுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம்கால யாக பூஜையும், 7:00 மணிக்கு, கோபுர கும்பாபிேஷகமும், 7:30 மணிக்கு, ஐயப்பசாமி, நாகராஜாவுக்கு மகா கும்பாபிேஷகமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.