மயிலம்: மயிலம் முருகன் கோவிலில், இன்று கார்த்திகை தீப விழா நடக்கிறது. மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் இன்று கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு காலை 6:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பகல் 12 :00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், பாலசித்தர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் மூலவர் தங்ககவசத்தில் அருள் பாலிக்கிறார். மாலை 6:00 மணிக்கு சங்குகண்ணர் மண்டபத்தின் மேல், மகா தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் கிரிவலம் நடக்கிறது.