பதிவு செய்த நாள்
25
நவ
2015
11:11
கிணத்துக்கடவு :ஆவலப்பம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. பொள்ளாச்சி, நெகமம் ரோடு, ஆவலப்பம்பட்டியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு, இன்று காலை, 8:10 மணிக்கு, விநாயகருக்கு அபிேஷக, அலங்கார பூஜையும், 9:10 மணிக்கு, ஆவலப்பம்பட்டி மாரியம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடக்கிறது. காலை, 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை, ஆஞ்சநேயர் , அஷ்டலட்சுமி, சென்றாயப் பெருமாள், பெருமாள் கோவில்களில் அபிேஷக, அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மதியம், 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 6:45 முதல் இரவு, 7:15 மணிக்குள் தீபம் ஏற்றப்படுகிறது.