நாகர்கோவில்: கார்த்திகை தீப விழாவையொட்டி குமரி மாவட்ட கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி புதன் அன்று நடக்கிறது. நாகர்கோவில் நாகராஜா கோயில், கேரளபுரம் அதிசய விநாயகர் கோயில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில், பறக்கை மதுசூதனபெருமாள் கோயில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. கார்த்திகை விளக்குகள் மற்றும் கொழுக்கட்டை வேக வைப்பதற்கான இலைகள் விற்பனை நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் சூடு பிடித்துள்ளது.