பதிவு செய்த நாள்
25
நவ
2015
11:11
பொள்ளாச்சி :பொள்ளாச்சி, கல்லாங்காட்டில் சதுரகிரி சுந்தர மகாலிங்கசாமி உடனமர் ஆனந்த வள்ளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று தமிழ்முறைப்படி வேள்வி வழிபாடு, லட்சார்ச்சனை, லட்சத்து எட்டு தீபம் மற்றும் மகாஜோதி திருவிழா இன்று நடக்கிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, மழை வளம் பொழிந்து உலகநலன் பெற வேண்டி, இக்கோவிலில், 18 சித்தர்கள் திருநெறியதமிழ் முறைப்படி வேள்வி வழிபாடு நடக்கிறது. லட்சத்து எட்டு தீபம் ஏற்றுதல் மற்றும் மகாஜோதி திருவிழா இன்று காலை, 6:00 மணி முதல் மாலை 800 மணி வரை நடக்கிறது. இரவு அன்னதானம் நடக்கிறது.முன்னதாக இவ்விழாவை சாம்பசிவ ரிஷிகள் முன்னின்று நடத்துகிறார். பொள்ளாச்சி, கடைவீதி ஸ்ரீபாலகணேசர் கோவிலில் கார்த்திகை ஜோதி திருவிழா மற்றும், 108 தீப ஜோதி தரிசனம் நடக்கிறது. இன்று மாலை, 7:00 மணிக்கு அபிஷேகமும், வெள்ளி கவசமும் அணிவித்தல் நடக்கிறது. தொடர்ந்து சொக்கப்பானை கொளுத்துதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதபெருமாள் கோவிலில் மகா விஷ்ணு தீபம் ஏற்றுதல் விழா நாளை நடக்கிறது. மாலை 4.10 மணிக்கு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை 6.10 மணிக்கு மகாவிஷ்ணு தீபம் ஏற்றுதல் நடக்கிறது. தீபாராதனை தரிசனமும், தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.