க.பரமத்தி: க.பரமத்தி யூனியன், பவுத்திர மேடு அருகே, சித்தர் சமாதியில் மகேஸ்வர குரு பூஜை நடந்தது. மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா, நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஏகாதச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து குருபூஜை, மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் வழிபாடு, திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. ஹோமங்களை மானாமதுரை ஞானசேகர சுவாமி தலைமையில் நடத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. முதலில் சிவ பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, அவர்கள் உணவு உண்ட பின், குழந்தை இல்லாத தம்பதிகள், சிவ பக்தர்களை வணங்கி மடி ஏந்தி பிச்சை எடுத்து தம்பதியினர் பிரசாதத்தை உண்டனர்.