விலங்கு வடிவமாகவும், மனித வடிவமாகவும், பூத வடிவமாகவும், தேவ வடிவமாகவும் தோன்றுபவர் விநாயகர். யானை தலையும், சுளகுச் செவியும், தும்பிக்கையும் யானையாகிய விலங்கிடம் பெற்றது. புருவமும் கண்களும் மனிதரிடம் பெற்றது பேழை வயிறும் குறுகிய கால்களும் பூத கணத்திலிருந்து பெற்றது நான்கு கைகளையும் தேவர்களிடமிருந்து பெற்றது. எனவே விலங்காய், மனிதராய், பூத கணமாய், தேவராய். என நான்கு படைப்புகளாய் தோன்றும் உருவமாய் விளங்கும் விநாயகரை வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்.