திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுபட்டியில் அமைந்துள்ளது புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல் மறைமாவட்ட அதிபர் பாதிரியார் மெல்கிலாரன்ஸ் கொடியேற்றி வைத்தார். மாலையில் நவநாள் திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை நடந்தது. நாளை காலை திருவிழா திருப்பலியும், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பகல் சப்பரபவனியும், மாலை 6 மணிக்கு பொது அன்னதானமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர்கள், ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.