Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாய், தந்தையை இழந்த குழந்தைகளே! அடிக்கிற கை தான் அணைக்கும் ..!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2015
01:12

ஒருமுறை கும்பகோணத்தில் இருந்து ஒரு டாக்டர் தம்பதி,தங்கள் மகனுடன் மகாபெரியவரைப் பார்க்க காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தனர். செங்கல்பட்டு வரை ரயிலில் வந்து, பிறகுவேறு வாகனத்தில் காஞ்சிபுரம் செல்வதாக அவர்களதுபயணத்திட்டம் அமைந்திருந்தது.ரயில் சென்று கொண்டிருந்த போது, டிக்கட் பரிசோதகர் வந்தார். டிக்கட்டை பரிசோதித்த போதுடாக்டரின் மகனுக்கு அரைடிக்கெட் எடுத்திருப்பது தெரியவந்தது. பையனை பார்த்து விட்டுஇவனது உருவத்தை வைத்துபார்த்தால் முழு டிக்கட் அல்லவா எடுத்திருக்க வேண்டும். சரி...மீதி பணத்தைக் கொடுங்கள். டிக்கட் தருகிறேன், என்றார். டாக்டர் அதை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். டிக்கெட்பரிசோதகர் எவ்வளவோ வாக்கு வாதம் செய்தும், டாக்டர் ஒப்புக்கொள்ளவில்லை. பரிசோதகர் வெறுத்துப் போய் வேறு பெட்டிக்கு போய்விட்டார்.காஞ்சிபுரத்தில் பெரியவரைத் தரிசிக்க ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர்.டாக்டர் தம்பதியரும் வரிசையில் இணைந்தனர். அவர்கள் முறைவந்ததும், பெரியவரைமரியாதையுடன் தரிசித்தனர்.பெரியவா! என் மகனுக்குஉபநயனம் (பூணுõல் அணிதல்) செய்யணும்! அதற்கு பெரியவா அனுக்கிரகம் செய்யணும். எந்த தேதியில் உபநயனம் செய்வது என பெரியவா சொன்னால், அதன்படியே செய்து விடுகிறேன், என்றார் டாக்டர்.

பெரியவர் அவரை உற்று நோக்கி விட்டு, அப்படியா...நீ போய் மடத்து சாஸ்திரியைப் பார். அவர் நாள் குறித்து தருவார். அந்த நாளிலேயே நடத்திடு! என்றதும், டாக்டர் பெரியவரை வணங்கி விட்டு நகர முயன்றார்.அவரை கைகாட்டி நிறுத்திய பெரியவர், ஊருக்கு கிளம்பும் முன் என்னை வந்து பார்த்துட்டு போ, என்றார். டாக்டரும் மகிழ்ச்சியுடன் தலையசைத்து விட்டு சாஸ்திரியைப் பார்க்கச் சென்றார்.நல்லநாள் குறித்து வாங்கி விட்டு, டாக்டர் குடும்பத்தினர் காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்தனர்.பின் பெரியவரிடம் வந்த டாக்டர், பெரியவா...நாள் குறிச்சு வாங்கிட்டேன், என்று சாஸ்திரி குறிப்பிட்டு தந்த நாள் பற்றி தெரிவித்தார்.அவருக்கு ஆசியளித்துபிரசாதம் தந்த பெரியவர்,அதிருக்கட்டும்...ஊருக்கு போகும் போது, நீ மறக்காமல் ஒன்று செய்ய வேண்டும்...செய்வாயா? என்றார் பெரியவர்.சொல்லுங்கோ...நீங்க சொல்வதை செய்ய சித்தமாயிருக்கேன், என்ற டாக்டரிடம், ஒன்றுமில்லே...நீ ஊருக்கு போறச்சே, ரயிலில் உன் பையனுக்கு முழுடிக்கட் எடுத்துண்டு பிரயாணம் பண்ணு. அரசாங்கத்தை ஏமாற்றக் கூடாது. நீ படிச்சு டாக்டராயிருக்கே! நாமளும் அவமானப்படக் கூடாது. ரயில்வே துறைக்கும் உதவிசெய்யணும்! புரிஞ்சுதா...நல்லபடியா உபநயனம் நடத்து! என்றார்.ரயிலில் நடந்த விவகாரம்பெரியவரின் ஞானதிருஷ்டிக்கு தெரிந்ததில் ஆச்சரியமில்லை! ஏனெனில், அவர் முக்காலமும் உணர்ந்த ஞானியல்லவா! (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar