பதிவு செய்த நாள்
03
டிச
2015
11:12
கோபி: கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மான் கோவில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பலவகை உரிமங்களுக்கான மறு பொது ஏலம் இன்று நடக்கிறது. இக்கோவிலின் குண்டம் திருவிழா, டிச.,9ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி, 28ம் தேதி மறுபூஜை வரை நடக்கிறது. திருவிழா காலங்களில் முடி எடுப்பது, மற்றும் முடி சேகரம் செய்து கொடுக்கும் உரிமம், வாகன பாதுகாப்பு சுங்க வசூல் செய்யும் உரிமம், எரிகரும்பு விற்பனை செய்து கொடுக்கும் உரிமம் ஆகிய இனங்களுக்கு, மறு பொது ஏலம், தான்தோன்றியம்மன் கோவில் வளாகத்தில், இன்று (டிச.,3ல்) காலை, 11 மணிக்கு நடக்கிறது. வாகன பாதுகாப்பு சுங்க வசூலிக்கும் உரிமத்துக்கு, 5,000 ரூபாயும், முடி எடுக்கும் மற்றும் முடிசேகரம், எரிகரும்பு விற்பனை ஆகிய உரிமங்களுக்கு தலா, 500 ரூபாய் டேவணித்தொகை செலுத்த வேண்டும்.