சக்தி வழிபாட்டை விளக்கியும் விவரித்தும் பல தந்திர நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தந்திர நூல்களின் எண்ணிக்கை 64. இவற்றுக்கு சிவபெருமானே ஆசிரியர் என்பது ஐதீகம். சியாமள ரகசியம், சாரதா திலகம், காளிகா தந்திரம், குலசூடாமணி, குலாணவம் போன்றவை சாக்த நூல்களில் சிலவாகும்.