மயிலாடுதுறை: வங்கக்கடலில் உறுவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக நாகை மாவட்டத்தில் பரவ லாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளநீர் தேங்கியு ள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் பெய்த கனம ழைநீர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி கோயில் சன்னதி மற்றும் பிரகாரங் களில் தேங்கியுள்ளது. கோயிலில் உள்ள வடிகால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் மழை வெள்ள நீர் வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் கோயிலுக்கு வந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.