பதிவு செய்த நாள்
07
டிச
2015
11:12
திருவண்ணாமலை: சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர, கிரிவலப்பாதையில் உள்ள குளத்து நீரில், 8 மணி நேரம் மிதந்து, பத்மாசனம் செய்து பக்தர் ஒருவர் வழிபாடு நடத்தினார். வேலூர் மாவட்டம், குடியாத்தம், எர்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிவசூரியன்நிலா, 42, விவசாயி, இவர் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர். சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், அதிலிருந்து அவர்கள் மீண்டு வர வேண்டி இவர், கிரிவலப்பாதையில் சங்கர மடத்தின் அருகே உள்ள, தீர்த்த குளத்தில் காலை, 9 முதல் மாலை, 5 மணி வரை பத்மாசனம் செய்து மிதந்தவாறு, வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார்.