துவாரகையில் பல தீர்த்தங்கள் உள்ளன. கோபியர் கண்ணனை நினைந்து வழிபட பஜனைகள் செய்ய அவனிடமிருந்தே வேண்டிப்பெற்ற இடம் கோபிசரோவர். விஷ்ணு தீர்த்தம் என்னும் பிரசித்திபெற்ற தீர்த்தத்தின் நீரைப் பருகுவது கங்கையில் நீராடுவதற்கு நிகரானது. அதேபோல் கோபிசரோவரில் நீராடுதல் கோதானம் செய்வதற்கு ஈடானது. கிருஷ்ணர் தம் துணைவியரோடு ஆவணி மாதத்தில் நீராடிய இடமிது ஒவ்வொரு துவாதசியன்றும் இங்கு பாய்களை தானம் செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.