சிதம்பரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்கடம்பூர். இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அருளும் லிங்காமூர்த்தியை கிரகங்கள் தினசரி வழிபடுவதாக ஐதிகம் உள்ளதால் ஞாயிறு - சிவப்பு, திங்கள் - வெள்ளை, செவ்வாய் - சிவப்பு, புதன் - பச்சை, வியாழன் - மஞ்சள், வெள்ளி - வெள்ளை, சனி - நீலம் என ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகத்துக்குரிய வண்ண வஸ்திரம் சாந்தி வழிபடுவது நற்பலன் கிட்டச்செய்யும் என்கின்றனர்.